காடையில் குழம்பு, வறுவல், கிரேவி எனப் பல வகையான ரெசிப்பிகளை செய்வார்கள். காடை சிக்கனை விட சுவையாக இருக்கும், அத்தகைய காடையில் ஃப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காடை – 3
எலுமிச்சைசாறு – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள்- தேவையான அளவு
செய்முறை :
- காடையை சுத்தம் செய்து கொள்ளவும்.
- அடுத்து சுத்தம் செய்த காடையுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கழுவவும்.
- அடுத்து காடையுடன் எலுமிச்சைசாறு, இஞ்சி, பூண்டுவிழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், தயிர், மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊற விடவும்.
- அடுத்து ஊறவைத்த காடையினை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் காடை வறுவல் ரெடி.