சுவையான புழுங்கலரிசி பணியாரம் ரெசிப்பி!!

By Staff

Published:

fb38c5da1816d12f02925333ef0c2cbd

பொதுவாக நாம் டிபனுக்கு இட்லி, தோசை ரெசிப்பிகளையே செய்து சாப்பிட்டு வருவோம். இன்று நாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான புழுங்கலரிசி பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
 பச்சரிசி- 1 கப், 
புழுங்கலரிசி – 1 கப், 
உளுந்து – அரை கப், 
ஜவ்வரிசி – கால் கப், 
வெந்தயம் – 1 ஸ்பூன், 
வெங்காயம் -2, 
பச்சை  மிளகாய் – 3, 
கடுகு – தேவையான அளவு, 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
எண்ணெய்- தேவையான அளவு, 
உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: 
 
1.    பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசி அனைத்தையும்  2 மணி நேரம் ஊறவிட்டு மைய அரைத்துக் கொள்ளவும். 
2.    வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். 
3.    அடுத்து உப்பு சேர்த்து 3 மணி நேரம் புளிக்கவிட்டு  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். 
4.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5.    இறுதியில் இதனை மாவுடன் கலந்து  பணியார சட்டியை சூடாக்கி மாவினை ஊற்றி எடுத்தால் புழுங்கலரிசி பணியாரம் ரெடி

Leave a Comment