உருளைக்கிழங்கில் இப்போது நாம் தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிடும் வகையிலான பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
உருளைக்கிழங்கு – கால் கிலோ
வெங்காயம் – 1
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இழை- சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து கையால் லேசாக மசிக்கவும். மிளகை மிக்சியில் போட்டு மைய பொடித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு வதக்கி உருளைக் கிழங்கைப் போட்டு வதக்கவும்.
3. அடுத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை தூவி இறக்கினால் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.