அன்னாசிப் பழத்தினை நாம் பொதுவாக அப்படியே சாப்பிடுவோம் அல்லது ஜூஸ் போல் செய்து குடிப்போம். அந்தவகையில் இப்போது அன்னாசிப் பழத்தில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ரவை- 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
அன்னாசிப் பழம் – 1
முந்திரிப் பருப்பு – 5
உலர் திராட்சை -5
நெய் – 20 மில்லி
செய்முறை:
1. அன்னாசிப் பழத்தின் தோலை நீக்கி, மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும்போது ரவையினைக் கொட்டி கிளறவும்.
3. ரவை வெந்ததும் சர்க்கரையைக் கொட்டி கிளறவும்.
4. அடுத்து வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வதக்கி கேசரிக் கலவையில் கொட்டி இறக்கினால் அன்னாசிப் பழ கேசரி தயார்.