பன்னீரில் நாம் இப்போது சப்பாத்தி, பூரிக்கு வைத்து சாப்பிடும் வகையிலான பொடிமாஸ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பன்னீர் – 250 கிராம்
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
இஞ்சி – ஒரு துண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 1/2
சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு- ½ ஸ்பூன்,
உளுந்து -1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1. பன்னீரை கையால் உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை துருவிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பூண்டு, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து பன்னீர் , மிளகுத்தூள் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து வேகவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் பொடிமாஸ் ரெடி.