சுவையான மசால் வடைக் குழம்பு செய்வோமா?

By Staff

Published:

29dfc7fec5de005749774d03a6065a1d

மசாலா வடையினைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்போது நாம் மசால் வடையில் அசைவக் குழம்புபோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
மசாலா வடை – 6
வெங்காயம் – 2
தக்காளி- 2
பச்சை மிளகாய் – 3
தேங்காய் – ½ மூடி
சோம்பு – 1/2 ஸ்பூன்
முந்திரி – 5
இஞ்சி – 1 துண்டு
தனியா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கிராம்பு – 2
மிளகு – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
1. வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, இஞ்சி மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளிக்கவும். 4. அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து அரைத்த தேங்காய் கலவை, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 
6. அடுத்து குழம்பு கொதிக்கும்போது வடைகளைப் போட்டு எடுத்தால் மசால் வடை குழம்பு ரெடி.
 

Leave a Comment