சுவையான கேரளா ஸ்டைல் மீன் குழம்பு ரெசிப்பி!!

By Staff

Published:

321086fc91063bbd823a3363ab8d2331

தென்னிந்திய உணவுகளில் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படும் வகையாகும்.  இப்போது நாம் கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 
மீன் – 500 கிராம்
சின்ன வெங்காயம் – 10 
தக்காளி – 1/4 கிலோ 
புளி – எலுமிச்சை அளவு 
தனியா – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 5
கடுகு – 1 ஸ்பூன் 
வெந்தயம்- 1/4 ஸ்பூன் 
தேங்காய்த் துருவல்- கால் கப்
உப்பு – தேவையான அளவு 
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு 

செய்முறை: 
1.    மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தனியா மற்றும் காய்ந்த மிளகாயை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
3.    அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடவும். 
5.    குழம்பு கொதித்த பின்னர், அதில் தேங்காய்ப்பால் ஊற்றி லேசாக கொதிக்கவிட்டு கறிவேப்பிலை தூவி இறக்கினால் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு ரெடி.
 

Leave a Comment