சுவையான கத்தரிக்காய் கொத்சு செய்யலாம் வாங்க!!

By Staff

Published:

fe1f38db579097026616993d7c9ce6ff

அசைவ பிரியாணியாக இருந்தாலும் அதற்கு கத்தரிக்காய் கொத்சு மிகவும் சுவையாக இருக்கும், அந்த பிரியாணிக்கு வைத்துச் சாப்பிடும் வகையில் கத்தரிக்காயில் கொத்சு ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
கத்தரிக்காய் – 3
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
தனி மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
புளி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3 
உப்பு – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை
1.    கத்தரிக்காயினை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
3.    அடுத்து பாத்திரத்தில் புளியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
4.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கி தனியா தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். 
5.   அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். 
6.   அடுத்து அதனுடன் 2 கப் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் கத்தரிக்காய் கொத்சு ரெடி.
 

Leave a Comment