சுவையான முருங்கைக்காய் கூட்டு!!

By Staff

Published:

5a30d34726e95daec5d08f40204c5e4d-1-2

முருங்கைக்காயில் பொதுவாக நாம் குழம்பு, சாம்பார் அல்லது பொரியல் செய்வதையே வழக்கமாகக் கொண்டு இருப்போம். இப்போது நாம் முருங்கைக் காயில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 2
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
சோம்பு- ½ ஸ்பூன், 
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்.
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு- ½ ஸ்பூன்,
உளுந்து பருப்பு – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் – 4 துண்டு

செய்முறை :

1. தேங்காயை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முருங்கைக்காயை நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து  மிக்சியில் வெங்காயம், பூண்டை போட்டு அரைத்துக் கொள்ளவும். 
3. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
4.  அடுத்து வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து முருங்கைக்காய், தண்ணீர், உப்பு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கினால் முருங்கைக்காய் கூட்டு ரெடி.

Leave a Comment