சுவையான தேங்காய் போளி ரெசிப்பி!!

By Staff

Published:

229a5e32280d33a290e97bed55aff944

போளி என்றால் பிடிக்காத நபர்கள் என யாரேனும் உள்ளனரா? இப்போது நாம் இனிப்பு போளியை செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க.

தேவையானவை:

மைதா மாவு- 2 கப் 
வெல்லம் – 1 கப்
தேங்காய்- 1மூடி,
ஏலக்காய் – 4
நெய் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள், நெய், தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தினைப் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெல்லப்பாகுடன் தேங்காய்த்துருவல்,  ஏலக்காய்த்தூள் சேர்த்து ஆறவிட்டு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
4. அடுத்து மைதா மாவின் நடுவே இந்த உருண்டைகளை வைத்து நான்கு புறமும் மடித்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய்விட்டு எடுத்தால் தேங்காய் போளி ரெடி.

Leave a Comment