சுவையான கேரட் பொரியல்!!

By Staff

Published:

9e00f79f96bcd5f941134c777a4341a7

வைட்டமின் ஏ சத்து கேரட்டில் அதிக அளவு உள்ளது, இதனால் கண்பார்வை குறைபாடுகள் அனைத்தும் சரியாகும். இப்போது நாம் கேரட்டில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கேரட் – 5
தேங்காய் – 1/2 கப் 
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1.    கேரட்டை, பச்சை மிளகாயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து கேரட், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
3.    அடுத்து தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால் கேரட் பொரியல் ரெடி.

Leave a Comment