வாழைப்பூவில் பொதுவாக பொரியல் அல்லது வடை செய்தே நாம் சாப்பிட்டு பழகி இருப்போம். இப்போது நாம் வாழைப்பூவில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை :
வாழைப்பூ – 1,
துவரம்பருப்பு – 50 கிராம்,
சின்ன வெங்காயம் – 8,
தக்காளி – 1,
புளி – சிறிதளவு,
காய்ந்தமிளகாய் – 4,
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்,
சாம்பார் தூள் – 2 ஸ்பூன்,
கடுகு – ¼ ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
1. வாழைப்பூவில் உள்ள நரம்பினை நீக்கி கழுவி நறுக்கி மோரில் போட்டு ஊற வைக்கவும்.
அடுத்து வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து குக்கரில் துவரம் பருப்பபினைப் போட்டு தண்ணீர், மஞ்சள் தூள், எண்ணெய் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கவும்.
3. அடுத்து சின்ன வெங்காயம், தக்காளி, புளிக்கரைசல், சாம்பார் தூள், வாழைப்பூ, உப்பு போட்டு மூடி நன் கு வேகவிடவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் சேர்த்து தாளித்து குக்கரில் கொட்டி இறக்கினால் வாழைப்பூ சாம்பார் ரெடி.