மக்காச் சோளத்தில் இப்போது மொறுமொறுவென இருக்கும் வகையிலான பக்கோடா ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
சோளம் – 200 கிராம்
கடலைமாவு – 100 கிராம்
சோள மாவு – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 1/2
மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்
சமையல் சோடா – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. மக்காச் சோளத்தை நன்கு வேகவைத்து மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. அடுத்து இதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவினை பக்கோடாக்களாகப் போட்டு எடுத்தால் மக்காச் சோள பக்கோடா ரெடி.