மொறுமொறு பாசிப்பருப்பு பக்கோடா ரெசிப்பி!!

By Staff

Published:

dbfc485f90f27e6032f9d5aff5024b00

பாசிப்பருப்பானது அதிக புரதச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இத்தகைய பாசிப்பருப்பில் இப்போது பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பாசிப்பருப்பு – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
இஞ்சி – சிறு துண்டு
தனியா – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்

இதையும் படியுங்கள்: மொறுமொறு மக்காச் சோள பக்கோடா!

செய்முறை :
1. பெரிய வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை  2  மணி நேரம் ஊற வைத்துக்  கொள்ளவும்.
2. அடுத்து மிக்ஸியில் பாசிப்பருப்பு, தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில்  பாசிப்பருப்பு,  வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவை  பக்கோடாக்களாகப் போட்டு எடுத்தால் பாசிப்பருப்பு பக்கோடா ரெடி.

மேலும் இதுபோன்ற தகவல்களைப் பெற telemgram.me/tamilminutes என்ற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.

Leave a Comment