காளானில் மொறுமொறுப்பான பக்கோடா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
காளான் – கால் கிலோ
வெங்காயம் – 2
கடலை மாவு – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
இஞ்சி – பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
தனியாத் தூள் – 1 ஸ்பூன்
மிளகுத் தூள்- ¾ ஸ்பூன்
சீரகத் தூள்- ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. காளானை கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் காளான், வெங்காயம், கறிவேப்பிலை, கடலை மாவு, இஞ்சி- பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசையவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சுவையான காளான் பக்கோடா தயார்.