மொறுமொறு காளான் பக்கோடா!!

By Staff

Published:

0ec1eaf51b3758f4b900381e2bdf59e1

காளானில் நாம் இப்போது பக்கோடா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதனை செய்து கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

தேவையானவை:
காளான் –  200 கிராம்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
கடலை மாவு- கால் கப் 
கான்பிளவர் மாவு – 5 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
சமையல் சோடா – தேவையான அளவு
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

செய்முறை :
1. காளானை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கடலை மாவு, காளான், கான்பிளவர் மாவு, பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா, அரிசி மாவு, உப்பு மற்றும் தண்ணீர்  சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் காளான் பக்கோடா ரெடி.

 

Leave a Comment