பொதுவாக நாம் உளுத்தம் பருப்பில்தான் வடை செய்து சாப்பிட்டு இருப்போனம். ஆனால் இன்று வித்தியாசமாக பாசிப்பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்,
தேவையானவை:
பாசிப்பருப்பு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 5
இஞ்சி – 1/2 இன்ச்
மிளகு – 1/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
கொத்தமல்லி – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. பாசிப்பருப்பை நீரில் 1 மணிநேரம் என்ற அளவில் ஊற வைக்கவும். அடுத்து பாசிப்பருப்பை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சியினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள், மிளகு, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவை வடைகளாக தட்டிப் பொரித்து எடுத்தால் பாசிப்பருப்பு வடை ரெடி.