பழைய சாதம் வீணாகிவிட்டால் அதனைக் கொட்டி எறியாமல் பயனுள்ள வகையில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையானவை:
பழைய சாதம்- 1 கப்
கடலை மாவு- 2 பிடியளவு
பச்சை மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை:
1. மிக்சியில் பழைய சாதத்தினைப் போட்டு அரைத்து கடலை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
2. அடுத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நறுக்கி இந்தக் கலவையுடன் சேர்த்தால் தோசை மாவு ரெடி.
3. இந்த மாவினை தோசைக்கல்லில் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் தோசை ரெசிப்பி ரெடி.