பொதுவாக சில்லி என்றால் நாம் சிக்கன், காலிஃப்ளவர் அல்லது மீனில்தான் செய்து கொடுப்போம். இப்போது நாம் ரொம்பவும் டேஸ்ட்டியான சில்லி பிரெட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பிரெட் – 10
கேசரி பவுடர் – சிறிதளவு
கான்பிளவர் மாவு- 3 ஸ்பூன்
கடலை மாவு- 100 கிராம்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. பிரெட்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் பிரெட்டைப் போட்டு நெய் விட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கான்பிளவர் மாவு, கேசரி பவுடர், உப்பு, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள் போட்டு கலந்து கொள்ளவும்.
3. அடுத்து பிரெட்டினை இந்தக் கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சில்லி பிரெட் ரெடி.