மொறுமொறு மிளகாய் பஜ்ஜி ரெசிப்பி!!

By Staff

Published:

adc83ea80d89be8ee23261a5236b4d08

பீச்சுக்கு நாம் செல்லும்போதும் சரி, திருவிழாக் காலங்களிலும் சரி அதிக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி வாங்கிச் சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைதான் மிளகாய் பஜ்ஜி ஆகும். இந்த மிளகாய் பஜ்ஜியை எப்படித் தயார் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:
கடலை மாவு – 200 கிராம்
பஜ்ஜி மிளகாய் – 10
அரிசி மாவு – 30 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன், 
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு, 

செய்முறை:

1. பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து தண்ணீர்விட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
2. அடுத்து மிளகாயை இரண்டாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை மாவில் நனைத்துப் பொரித்து எடுத்தால் மிளகாய் பஜ்ஜி ரெடி.

இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற t.me/tamilminutes டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள்.

Leave a Comment