சுரைக்காயில் பொதுவாக குழம்பு, கூட்டு, பொரியல் போன்ற ரெசிப்பிகளையே செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது சுரைக்காயில் இப்போது பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
சுரைக்காய்- 1
பச்சரிசி- அரை கப்
கடலைப் பருப்பு- 1 கப்
உளுந்து – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு- 1 ஸ்பூன்
பாசிப் பருப்பு- 1 ஸ்பூன்
கொத்தமல்லி இழை- கைப்பிடியளவு
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
செய்முறை :
1. கடலைப் பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, அரிசி அனைத்தையும் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. அடுத்து இதனை மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து இதனுடன் கொத்தமல்லி இழை, கறிவேப்பிலை சேர்த்து பக்கோடக்களாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுரைக்காய் பக்கோடா ரெடி.