நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதில் கொத்தமல்லி முக்கிய பங்கினை வகிக்கின்றது, மேலும் இது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது.
தேவையானவை:
கொத்தமல்லி விதை- 100 கிராம்
ஏலக்காய்- 2
சர்க்கரை- 2 ஸ்பூன்
பால்- அரை டம்ளர்
செய்முறை:
1. வாணலியில் கொத்தமல்லியினைப் போட்டு வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் பொடித்த கொத்தமல்லி தூள், நசுக்கிய ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
3. அதன்பின்னர் இதனை வடிகட்டி பால் மற்றும் சர்க்கரை சேர்த்தால் கொத்தமல்லி டீ ரெடி.