கேரளா ஸ்டைல் தேங்காய் தால் ரெசிபி நம்ம வீட்டிலே செய்யலாமா!

By Velmurugan

Published:

பொதுவாக தால் நமக்கு மிகவும் பிடித்தமான உணவு, அதை மேலும் சத்தானதாக மாற்ற தேங்காய் சேர்த்து அதை தேங்காய் தால் ரெசிபி செய்து பார்க்கலாமா..

செய்ய தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு – 225 கிராம்
கடலை எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
தேங்காய் பால் – 400 மி.லி
வெஜிடேபிள் ஸ்டாக் – 400 மி.லி
தக்காளி – 4
பீர்க்கங்காய் – 1
பூண்டு மற்றும் கிராம்பு – 4
இஞ்சி – சிறுதுண்டு
சீரகப் பொடி – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – கைப்பிடியளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப

இட்லி ,தோசை, சப்பாத்தி னு எல்லாத்துக்கும் ஒரே சைடிஸ்- முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி!

செய்முறை :

முதலில் ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும் அதில் வெங்காயம், கிராம்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மைசூர் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி, வெங்காயம் வதங்கும் வரை ஊற வைக்க வேண்டும்.

பிறகு வாணலியில் இஞ்சி, பூண்டு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு ஊற வைத்த பருப்பை நன்கு கழுவி வாணலியில் போட்டு, தேங்காய் பால், வெஜிடேபிள் ஸ்டாக் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி பருப்பை நன்கு வேக வைக்க வேண்டும்.

அதற்குள் அடுத்த ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, பின் தக்காளியை அதில் போட்டு, சிறிது நேரம் வைத்து, பின் அடுப்பில் இருந்து இறக்கி, குளிர்ச்சியான நீரில் அலசி, தக்காளியின் தோலை நீக்கி விட்டு, லேசாக மசித்து, பருப்பு வெந்ததும் வாணலியில் போட்டு, 10 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

தளபதி 67 பற்றி லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

பின் நறுக்கி வைத்த பீர்க்கங்காய் மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். காய் நன்கு வெந்துவிட்டால், வாணலியில் உள்ள பருப்பு மற்றும் காய் நன்கு மசிந்து கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது சுவைப் பார்த்து வேண்டுமானால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி கொத்தமல்லியை தூவினால், சுவையான தேங்காய் தால் ரெசிபி ரெடி.

Leave a Comment