சாம்பார் ருசிக்கனுமா?!சமையல் குறிப்புகள்

By Staff

Published:

5b5f8edee473212bdb371f909a47627b-1-2

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்… சாம்பாரும் ருசிக்கும். துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள். பாகற்காயின் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.

585791883b4a9c7e7f22f52cc9ee0c8f

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிச்சமாகிவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பிஸ்கட் ரெடி. சின்ன சின்னதா பொரிச்செடுத்து இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி.

Leave a Comment