நாவில் எச்சில் ஊறவைக்கும் செட்டிநாடு சிக்கன் வறுவல்!!

By Staff

Published:

2f2ebbccb12c99c735f47005c2ec1d85-1

செட்டிநாடு சமையல் என்றாலே அனைவரும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். இப்போது நாம் அந்த சிக்கனில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
சிக்கன் – 1 கிலோ
வெங்காயம்- 2
தக்காளி- 3
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
மிளகுத் தூள் -3ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி- 1 துண்டு
பூண்டு – 1
பட்டை – 2
கறிவேப்பிலை – கைப்பிடியளவு

செய்முறை!!
1.    வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். 
2.    அடுத்து சிக்கனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை போட்டு வதக்கி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
4.           அடுத்து ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேகவிட்டு கறிவேப்பிலை போட்டு இறக்கினால் செட்டிநாடு சிக்கன் வறுவல் ரெடி.

 

Leave a Comment