மழை பெய்யும் நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் ரொம்பவும் எளிதான வெங்காய பக்கோடா செய்து சாப்பிடலாம், இப்போது அந்த வெங்காய பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – கால் கிலோ
வெங்காயம் – கால் கிலோ
பச்சை மிளகாய் – 5
சோம்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டவும், மேலும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, எண்ணெய், உப்பு, கடலை மாவு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலவையைப் போட்டு பொரித்து எடுத்தால் வெங்காய பக்கோடா ரெடி.