10 நிமிஷத்துல செய்யக்கூடிய பிரெட் ஆம்லெட்!!

By Staff

Published:

d6686e8f5d7a0acc19ac82f8d7094dec

ஆம்லெட் அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிப்பியாகும், இந்த ஆம்லெட்டில் நாம் இன்று ரொம்பவும் சிம்பிளான ரெசிப்பியைத் தான் பார்க்கப் போகிறோம். அதாவது பிரெட்டில் நாம் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பிரெட்- 2 துண்டுகள்

முட்டை – 3

வெங்காயம்- 1

பச்சை மிளகாய் –  2

மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

வெண்ணெய்-  2 டேபிள் ஸ்பூன்

சாட் மசாலா – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

  1. வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. அடுத்து பிரெட் மீது வெண்ணெய் தடவி பிரெட்டுக்குள் முட்டைக் கலவையை வைத்து நான்கு புறமும் மடித்து தோசைக் கல்லில் போட்டு எடுத்தால் பிரெட் ஆம்லெட் ரெடி.

Leave a Comment