சளி, இருமலை சரிசெய்யும் துளசி இலை டீ!!

By Staff

Published:

e359705512c6b105e35af73bebd13e06

துளசி இலை சளி, நாள்பட்ட இருமல், தும்மல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. இத்தகைய துளசியில் இப்போது டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
துளசி இலை- கைப்பிடியளவு
ஏலக்காய்- 4
சுக்கு- ½
தேன்- 2 ஸ்பூன்
பால்- கால் கப்

செய்முறை:
1.    துளசி இலைகள், ஏலக்காய், சுக்கு மூன்றையும் மிக்சியில் போட்டு நசுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் நீர் 2 டம்ளர் அளவில் ஊற்றி நசுக்கிய கலவையைப் போட்டு கொதிக்கவிடவும்.
3.    அதன்பின்னர் இந்த டீயை வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் பால் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி.
 

Leave a Comment