வாழைப்பூவில் இப்போது நாம் இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடும் வகையிலான குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையானவை :
வாழைப்பூ – 1
வெங்காயம் – 2
தக்காளி – 3
பட்டை – 2
கிராம்பு – 2
சோம்பு – 1/2ஸ்பூன்
சீரகம் – 1/2ஸ்பூன்
பிரியாணி இலை – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – தேவையான அளவு
செய்முறை:
1. வாழைப்பூவின் நரம்பை நீக்கி மோரில் ஊறவைத்து எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளிக்கவும்.
3. அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அடுத்து வாழைப்பூவைப் போட்டு நன்கு வதக்கவும்.
4.அடுத்து மிக்சியில் தேங்காய் துருவல் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து இந்தக் கலவையினையும் போட்டு வதக்கவும்.
5. அடுத்து மிளகாய்த் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
6. கொதிக்கவிட்டு இறக்கி கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் வாழைப் பூ குருமா ரெடி.