நம் வீட்டு சமையல் அறையின் ராணியாக வேண்டுமா? எளிமையான 10 டிப்ஸ்

By Velmurugan

Published:

நாம் வீடுகளில் சமைக்கும் போது சில நேரங்களில் சுவை சிறப்பாக அமைவதில்லை, அதற்கு காரணம் சின்ன சின்ன விஷயங்கள் தான், அதை மாற்றும் போது சுவை சிறப்பாக அமைப்பும். எளிமையான 10 ‘டிப்ஸ்’ இதோ..

*பருப்பு அவிக்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் எளிதாக வெந்துவிடும்.
* நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் எளிதில் கெடாது.
* இட்லிக்கு உளுந்து அரைக்கும்பொழுது ‘ஐஸ்வாட்டர்’ விடவும். மாவு சூடாகாமல்… இட்லி பூப் போன்று வரும்.
* சப்பாத்தி மிருதுவாக இருக்க… வெதுவெதுப்பான பால் விட்டு மாவு பிசையுங்கள்.
*குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து சேர்த்து, கொதிக்க விட்டு இறக்குங்கள்.
* சர்க்கரைப்பாகில் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சீக்கிரம் கெட்டியாகாது.

கேரள ஸ்டைல் ஸ்பெஷல் பச்சரிசி நெய்யப்பம் வீட்டிலேயே பண்ண முடியுமா!

*தோசைக் மாவு அரைக்கும் போது கொஞ்சம் வெண்டைக்காயும் சேர்த்து போட்டுட்டு அரைச்சா தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.
* மோர் குழம்பு செய்யும் போது சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் ருசியே தனி.
* மீன் சமைக்கும் போது எலுமிச்சை சாறு துளி விட்டிங்கன்னா ருசியாகவும் இருக்கும். மீனும் கருக்காது.
* கடலையை வறுப்பது போல் கூழ்வற்றலையும் எண்ணெய் இல்லாமல் மணலில் வறுத்தெடுக்கலாம். பெரிதாகவே பொரியும்.

 

Leave a Comment