தோசை மாவு முடிந்ததா? இதோ காலை டிபனுக்கு சுவையானமுட்டை கார தோசை…!

தோசை இட்லி மாவு தீர்ந்து விட்டால் போதும் இல்லத்தரசிகளுக்கு நாளை காலை என்ன டிபன் செய்வது என்பது மிகப்பெரிய குழப்பமாக இருக்கும். பெரும்பாலும் எளிமையான அதே சமயம் சுவையான ரெசிபியாக இருக்க வேண்டும் என்று…

mutta kara dosa

தோசை இட்லி மாவு தீர்ந்து விட்டால் போதும் இல்லத்தரசிகளுக்கு நாளை காலை என்ன டிபன் செய்வது என்பது மிகப்பெரிய குழப்பமாக இருக்கும். பெரும்பாலும் எளிமையான அதே சமயம் சுவையான ரெசிபியாக இருக்க வேண்டும் என்று தான் இல்லத்தரசிகள் காலை நேரத்திற்கு விரும்புவார்கள். அப்படி ஒரு சுவையான மிக எளிமையான ரெசிபி தான் முட்டை கார தோசை.

mutts kara dosa

இந்த முட்டை கார தோசை சட்டென்று செய்துவிடக் கூடிய அளவிற்கு மிக மிக எளிமையானது. அதேசமயம் சுவையும் அட்டகாசமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த முட்டை  கார தோசையை ரசித்து சாப்பிடுவார்கள்.

இந்த முட்டை கார தோசை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஆறு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.

நறுக்கிய மூன்று பச்சை மிளகாய்களை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய சிறிதளவு இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளவும். இவை மூன்றையும் எண்ணெயில் வதக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவு கடலை மாவு எடுத்து அதனுடன்  தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் மாவை சற்று தளர்வாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

mutta kara dosa

இந்தக் கடலை மாவுடன் அடித்து வைத்த முட்டை மற்றும் வெங்காய கலவையை சேர்க்க வேண்டும். பிறகு இதில் தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் காய்ந்ததும் ரவா தோசை ஊற்றுவது போல மாவை சுழற்றி ஊற்றி முட்டை கார தோசை தயாரிக்கலாம்.

அவ்வளவுதான் சுவையான வித்தியாசமான முட்டை கார தோசை தயார்…!