மாணவியால் பேருந்து வசதி பெற்ற கிராமம்.. மாணவி கையாலே தொடங்கி வைத்த அமைச்சர்

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம், அம்மணப்பாக்கம் கிராமத்தினைச் சேர்ந்த மாணவி தர்ஷினி தங்கள் பகுதிக்கு பேருந்து வசதில் இல்லை…

Zee tamil Viral student

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம், அம்மணப்பாக்கம் கிராமத்தினைச் சேர்ந்த மாணவி தர்ஷினி தங்கள் பகுதிக்கு பேருந்து வசதில் இல்லை எனவும், இதனால் பள்ளிக்கு சில கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இச்செய்தி வைரலாகப் பரவியது. மேலும் போக்குவரத்துத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் சென்றது. 60 முதல் 70 குடும்பங்கள் வரை வாழும் இக்கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் தினமும் பள்ளிக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர் 5 கிலோமீட்டர் வரை நடந்து சென்ற பின்னர் தான் பேருந்து ஏற வேண்டும்.

பளபளன்னு ஜொலிக்கப் போகும் தமிழக அரசு கலை, பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்.. 100 கோடி நிதி ஒதுக்கீடு

இந்நிலையில், இன்று காலை விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், அம்மணம்பாக்கம் கிராம மாணவர்கள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில் அம்மணம்பாக்கம் முதல் அனந்தமங்கலம் வரை வழித்தடத்தில் பேருந்து சேவை வழங்க அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று காலை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் பள்ளி மாணவி தர்ஷினி கொடி அசைத்து பேருந்துச் சேவையினைத் துவக்கி வைத்தார். பின்னர் மாணவியுடன் பேருந்தில் பயணித்து சிறிது நேரம் உரையாடினார் அமைச்சர் சிவசங்கர்.

பாடல்களின் மூலம் தனது திறமையால் மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல், தனது கிராமத்தின் முன்னேற்றத்திற்காகவும் பேருந்து சேவையினை ஏற்படுத்திக் கொடுத்த தர்ஷினிக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.