வருமானத்தில் மண்ணைக் கவ்வ வைத்த யூடியூப்.. விரக்தியில் யூடியூபர் எடுத்த முடிவு..

இணையதளம் இந்தியாவில் அறிமுகமான போது அது முக்கிய அலுவலகங்கள் மற்றும் ஐடி கம்பெனிகள் மட்டுமே பயன்டுத்த முடியும் என்ற சூழல் உருவானது. அதன்பின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய இன்று ஒற்றை மெயில் மூலமாக நமது…

Nalini Unnagar

இணையதளம் இந்தியாவில் அறிமுகமான போது அது முக்கிய அலுவலகங்கள் மற்றும் ஐடி கம்பெனிகள் மட்டுமே பயன்டுத்த முடியும் என்ற சூழல் உருவானது. அதன்பின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய இன்று ஒற்றை மெயில் மூலமாக நமது ஒட்டுமொத்த தனி விபரங்களையும் அள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஒரே ஒரு இ மெயில் ஐடி மூலமாக தனியாக ஒரு சேனலையே உருவாக்கி அதில் இன்று லட்சக்கணக்கில் வருமானம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு உதவும் சோஷியல் மீடியா பிளாட்பார்ம் தான் யூ டியூப். ஆரம்பத்தில் யூ டியூப் பக்கம் என்பது வீடியோக்களை மட்டுமே பதிவேற்றி பார்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

நாளடைவில் யூடியூப்பில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நடைமுறை வந்த பின்னர் ஒவ்வொருவரும் தங்களது தனித்திறன்களை வீடியோவாக எடுத்து அதில் வருமானம் பார்க்கத் தொடங்கினர். சிலர் இதனை முழுநேர தொழிலாகவும் செய்து அதிக பார்வைகளால் லட்சங்களில் மாத வருமானம் பார்த்து வருகின்றனர். ஆனால் 8 லட்ச ரூபாய் செலவு செய்து மூன்று வருடங்களாக வெறும் 2450 சப்ஸ்கிரைபர்களை வைத்து யூ டியூப்பால் வருமானம் இல்லை என்று புலம்பி தனது வீடியோக்கள் அனைத்தையும் அழித்திருக்கிறார் இந்திய யூடியூபர் நளினி உன்னாகர் என்ற பெண்.

மினிமம் பேலன்ஸ்-க்கு அதிகமாக அக்கவுண்டில் பணம் இருக்கிறதா? FDக்கு மாற்றும் புதிய வசதி..!

நளினி’ஸ் கிச்சன் தெரபி என்ற பெயரில் யூடியூப் சேனலை நிர்வகித்து வந்த நளினி உன்னாகர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் சேனைலைத் தொடங்கியிருக்கிறார். பொதுவாகவே யூடியூப்பில் சமையல் மற்றும் பயணம் குறித்த வீடியோக்களுக்கு நிறைய பார்வைகள் வரும். ஆனால் நளினி உன்னாகரின் சேனலுக்கு போதுமான பார்வையாளர்கள் கிடைக்கவில்லை. மேலும் இதற்காக சுமார் 8 லட்சம் வரை கேமரா, மைக், கிச்சன் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியிருக்கிறார்.

தொடர்ந்து சமையல் வீடியோக்களைப் பதிவிட்டவருக்கு எதிர்பார்த்த அளவு பார்வைகள் கிடைக்கவில்லை. சந்தாதாரர்களும் சுமார் 2450 என்ற அளவில்தான் இருந்தனர். இதனால் அவருக்கு யூடியூப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்கு பலன் இல்லாததால் விரக்தி அடைந்த நளினி உன்னாகர், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “யூடியூப் அல்காரிதம் மீது விரக்தி அடைந்திருக்கிறேன். இந்த முயற்சியில் நான் தோல்வி அடைந்து விட்டேன். யூடியூப்பில் சாதிப்பதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும் போல என்று கூறி தனது சேனலுக்காக வாங்கிய உபகரணங்களை விற்கப் போவதாகவும், விருப்பமுள்ளோர் வாங்கிக் கொள்ளவும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஆன்லைன் பிளாட்பார்ம் வருமானங்களை எப்போதும் முதன்மையானதாக வைத்துக் கொள்ளக் கூடாது. அவற்றை நம்பாமல் இருப்பது புத்திசாலித்தனம் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார் நளினி உன்னாகர்.