MrBeast என்ற பெயரில் உலக அளவில் பிரபலமானவர் ஜிம்மி டொனால்ட்சன் என்பதும், அவர் ஒரு பொழுதுபோக்கு ராஜ்ஜியத்தையே நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது மிகப்பெரிய வெற்றிக்கும் மத்தியில், ஒரு சாதாரண நபரைப் போல வாழ முடியவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
“நான் ஒரு ரோபோட் இல்லை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சில நேரங்களில், ஒரு கேம் விளையாட வேண்டும் அல்லது பிடித்தமான விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்குப் எனக்கு நேரமில்லை. என்னுடைய கால அட்டவணையை பார்த்தவுடன், அதை நான்கு நாட்கள் கழித்து செய்யலாம் என்று ஒத்தி வைக்கிறேன்.
அத்தகைய தருணங்களில், நான் ஒரு உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்ட விலங்கு போலவே உணர்கிறேன். எனக்குப் பிடித்த எந்தத் தேர்வு செய்வதற்கான நேரமில்லை. என் தொழில்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு ரோபோ போலவே செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இதனால், மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
YouTube-க்கான கண்டெண்ட் தயாரித்தல், தனது வியாபாரங்களுக்கு ஐடியா யோசித்தல், YouTube வீடியோயை வைரல் ஆக்குவதற்கான தயாரிப்பு நிறுவன பணிகளை கவனித்தல் என எந்த நேரமும் பிஸியாக இருப்பதால், தனக்கு பிடித்த செயல்களை செய்ய நேரமில்லை என அவர் புலம்பியுள்ளார்.
இதனைப் பார்க்கும்போது, “எத்தனை கோடி செல்வம் இருந்தாலும், மன நிம்மதிக்கும் பணத்திற்கும் தொடர்பு இல்லை. ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் கூட, அவன் நினைத்ததை உடனே செய்யக்கூடிய நிலையில் இருந்தால், அவனே உண்மையான பணக்காரன்,” என்கிற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.