யூடியூப் ஸ்டோரிஸ் வரும் ஜூன் 26, 2023 அன்று முடிவுக்கு வரவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து யூடியூப் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. யூடியூப் ஸ்டோரிஸில் குறும்படங்கள், சமூக இடுகைகள் மற்றும் நேரலை வீடியோக்கள் போன்ற பிற வீடியோக்கள் பதிவாகி வந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்படுகிறது.
யூடியூப் ஸ்டோரிஸ் என்பது கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படைப்பாளிகளின் சிறிய வகை வீடியோக்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான தளமாக இது இருந்தது. ஆனால் யூடியூப் ஸ்டோரிஸ் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களின் ஸ்டோரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதால் யூடியூப் ஸ்டோரிஸ் பிரபலமாகவில்லை.
இந்த நிலையில் யூடியூப் ஷார்ட்ஸ் என்பது டிக்டாக் செயலிக்கு போட்டியாக இருப்பதாக கடந்த 2020ஆன் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. யூடியூப் ஷார்ட்ஸ் நன்றாக பிரபலமடைந்து வருகிறது என்பதும், இவை பயனர்களுக்கும் நல்ல வியூஸ் மற்றும் வருமானத்தை தருவதாகவும் கூறப்படுகிறது.
யூடியூப் ஷார்ட்ஸ் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே யூடியூப் ஸ்டோரிஸ் மூடப்படுவதாகவும் தெரிகிறது.