இனி 1000 சப்ஸ்கிரைபர்கள் தேவையில்லை, 500 இருந்தால் போதும்: யூடியூப் அதிரடி அறிவிப்பு..!

By Bala Siva

Published:

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடிபில் 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே monetizationஎன்ற பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது 1000 சப்ஸ்கிரைபர்கள் என்பதற்கு பதிலாக 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலே அவர்களுக்கு monetizationஎன்ற வசதி கிடைக்கும் என யூடியூப் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சிறிய அளவில் யூடியூப் நடத்தும் பயனர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1000 சப்ஸ்க்ரைபரில் இருந்து 500 சப்ஸ்கிரைபர்கள் என மாற்றப்பட்டாலும் 4000 பார்வை நேரம் என்பதில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 பார்வை நேரங்கள் என்பதை 500 சந்தாதாரர்கள் என யூடியூப் மாற்றி இருப்பதை அறிந்து சிறிய படைப்பாளிகள் தங்கள் வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதிப்பது இனி எளிது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி இப்போதைக்கு அமெரிக்கா, பிரிட்டன், தைவான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும். விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் சாதனங்களில் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட youtube Shortsதற்போது பிரபல கடந்து வருவதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. youtube Shorts பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருவதால் அதன் படைப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யூடியூபின் இந்த அறிவிப்பை அடுத்து எளிதில் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த சில குறிப்புகளை பார்ப்போம்.

* மக்கள் பார்க்க விரும்பும் உயர்தர வீடியோக்களை உருவாக்கவும்.
* உங்கள் சேனலை சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் விளம்பரப்படுத்தவும்.
* பிற படைப்பாளர்களுடன் ஒத்துழைக்கவும்.
* கருத்துகள் பிரிவில் உங்கள் பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவும்.

இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், யூடியூபில் monetization பெற்றவர்களுக்கு அதிக பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.