AI வீடியோக்களுக்கு YouTubeல் இனி Monetization இல்லையா? கிரியேட்டர்கள் அதிர்ச்சி.. ஆனாலும் ஒரு நல்ல விஷயம்..!

தற்போது YouTube வீடியோக்கள் பல AI டெக்னாலஜி மூலம் உருவாகி வரும் நிலையில், “AI டெக்னாலஜி மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு Monetization கிடையாது, வருமானமும் கிடையாது” என்று கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள…

youtube

தற்போது YouTube வீடியோக்கள் பல AI டெக்னாலஜி மூலம் உருவாகி வரும் நிலையில், “AI டெக்னாலஜி மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு Monetization கிடையாது, வருமானமும் கிடையாது” என்று கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து YouTube விளக்கம் அளித்துள்ளது.

Monetization கொள்கைகளில் சில புதிய அறிவிப்புகளை ஜூலை 15ஆம் தேதி YouTube வெளியிட உள்ளது. அதில் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் இனிமேல் வருமானத்தை பெறாது என்ற குறிப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இது முழுக்க முழுக்கப் பொய் என YouTube தெரிவித்துள்ளது.

யூடியூப் தலையங்கப் பிரிவு தலைவர் ரெனே ரிச்சி என்பவர் இது குறித்துக் கூறியபோது, “தற்போதைய Monetization விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது உண்மைதான் என்றும், யூடியூப் எப்போதும் அசல் உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை மட்டுமே ஆதரிக்கும்” என்றும் தெரிவித்தார். போலி வீடியோக்கள் மற்றும் ஸ்பேம் வீடியோக்களுக்கு Monetization கொள்கையில் வருமானம் கிடைக்க தகுதியற்ற வீடியோவாக கருதப்படும் என்று கூறியவர், அதே நேரத்தில் குறைந்தபட்ச எடிட்டிங், சில விளக்கத்துடன் கூடிய கிளிப்புகள், மற்ற படைப்பாளர்களின் வீடியோக்களை அவர்களுடைய அனுமதியுடன் பயன்படுத்துவது ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

“AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு Monetization கிடையாது என்பது தவறான தகவல் என்றும், AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு வருமானம் நிறுத்தப்படாது” என்றும் குறிப்பிட்டார். ஒரு YouTube கிரியேட்டர் தனது சொந்த கருத்துக்களை தெரிவிப்பதற்கு AI கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், குறிப்பாக AI மூலம் தனது கருத்துக்களை கூறுவதற்கான குரல் ஸ்கிரிப்ட் ஒரு கிரியேட்டர் பயன்படுத்தினால், அதில் தவறு இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில் பார்வையாளர்களின் மதிப்பை கவனிக்காமல் ஸ்பேம் மூலம் நிரப்பினால் அந்த வீடியோக்களுக்குத்தான் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

AI வளர்ச்சிக்கு YouTube எப்போதும் ஆதரவு தரும் என்றும், ஆனால், அதே நேரத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் ஸ்பேமை தடுப்பதற்கும் ஒரு சமநிலையை ஏற்படுத்த YouTube முயற்சி செய்கிறது என்றும், AI மூலம் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு தடைகளை உருவாக்க எப்போதும் யூடியூப் நினைத்ததில்லை” என்றும் கூறியுள்ளது.