ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இதுவரை இதில் பயணம் செய்த 288 ரயில் பயணிகள் பலியாகி உள்ளனர். மேலும் 900 க்கும் அதிகமானார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு, ராணுவப் படையினர் என பல்வேறு குழுக்கள் இணைந்து மக்களை மீட்டு வந்தனர்.
200 ஆம்புலன்ஸ்கள், 45 மொபைல் மருத்துவக் குழுக்கள், 50 மருத்துவர்கள் தயார் நிலையில் மீட்பு பணியின் போது வைக்கப்பட்டிருந்தார்கள்.
படுகாயம் அடைந்த 900 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டார்கள்.
காயமுற்ற பயணிகளுக்கு இரத்தம் வழங்குவதற்காக தாமாகவே முன்வந்து பல இளைஞர்கள் ரத்ததானம் வழங்க மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர்.
இதுவரை 3000 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
