இந்தியாவில் அறிமுகமானது Xiaomi Pad 6: ரூ.23,999 விலையில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

By Bala Siva

Published:

Xiaomi நிறுவனத்தின் Pad 5 மாடல் குறித்த தகவல்களை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் நேற்று முதல் Xiaomi நிறுவனம் Pad 6 என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ள நிலையில் இந்த மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

Xiaomi Pad 6 நேற்று அதாவது ஜூன் 13ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாடல் டேப்லெட் Qualcomm Snapdragon 870 SoC பிராஸசர், 144Hz அம்சத்துடன் வெளியாகியுள்ளது. மேலும் 11-இன்ச் LCD டிஸ்ப்ளே, 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 8,840mAh பேட்டரியை கொண்டுள்ளது என்பதும், MIUI உடன் Android 13 ஓஎஸ் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Xiaomi Pad 6 விலை 6ஜிபி/128ஜிபி வகைக்கு ரூ.23,999 மற்றும் 8ஜிபி/256ஜிபி வகைக்கு ரூ.25,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் லேப்டாப் ஜூன் 21 முதல் நாட்டில் Amazon.in, Mi.com மற்றும் Xiaomi சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.

Xiaomi Pad 6 இன் சில முக்கிய அம்சங்கள் இதோ:

* Qualcomm Snapdragon 870 SoC பிராஸசர்
* 144Hz அம்சத்துடன் 11-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
* 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம்
* 128 ஜிபி அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ்
* 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
* 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
* 8,840mAh பேட்டரி
* பேட் 14க்கான MIUI உடன் Android 13

பெரிய டிஸ்ப்ளேவுடன் கூடிய சக்திவாய்ந்த டேப்லெட்டைத் தேடும் பயனர்களுக்கு Xiaomi Pad 6 ஒரு சிறந்த தேர்வாகும். கேமிங், வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் மாணவர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு நல்ல லேப்டாப் ஆகும்.