இந்த நிலையில், Grok என்ற புதிய வசதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே X தளம் அறிமுகப்படுத்திய நிலையில், இன்னும் அதன் அருமை தெரியாமல் பலர் உள்ளனர். இந்த Grok வசதி என்பது ஏஐ தொழில்நுட்பத்தை (AI Technology) கொண்டு பல்வேறு பலன்களை X பயனர்களுக்கு அளிக்கிறது.
குறிப்பாக, “டெக்ஸ்ட் டு இமேஜ்” என்ற வசதியை இந்த Grok செய்து தருகிறது. எந்த விதமான இமேஜ் நமக்கு வேண்டும் என்பதை Prompt மூலம் விளக்கம் கொடுத்தால், சில நொடிகளில் இந்த Grok நமக்கு தேவையான இமேஜை வழங்குகிறது.
மேலும், PDF பைல்களையும் இந்த Grok புரிந்து கொண்டு அதற்கேற்ப நமக்கு விடை அளிக்கிறது. குறிப்பாக சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு Grok தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சாப்ட்வேர் டெவலப்பர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் மற்றும் டிசைனர்களின் பணிகளுக்கும் உதவியாக இந்த Grok தளம் விளங்குகிறது.
ஆனால், இந்த Grok வசதி அனைத்து X பயனர்களுக்கும் கிடைக்காது. இது பிரீமியம் தொகை கட்டி பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.