உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்கள் யார் தெரியுமா? பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய குடும்பம்..!

உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளும்பெர்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உலகின் 25 டாப் பணக்கார குடும்பங்கள் பட்டியல் இருந்தாலும் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களைக் காண்போம். வால்மார்ட் குடும்பம்…

World Billionare Families

உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளும்பெர்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உலகின் 25 டாப் பணக்கார குடும்பங்கள் பட்டியல் இருந்தாலும் முதல் 10 இடங்களைப் பெற்றவர்களைக் காண்போம்.

வால்மார்ட் குடும்பம்

அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 46% வால்டன் குடும்பத்தின் வசம் உள்ளது. இவர்களது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 432.4 பில்லியன் டாலர் ஆகும். மேலும் தனது வாரிசுகளுக்கு சொத்தினை நிறுவனரான சாம் வால்டன் பிரித்துக் கொடுத்து விட்டார்.

துபாய் அல்நஹ்யான் குடும்பம்

எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் அல்நஹ்யான் குடும்பம் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் எண்ணெய் வணிகத்தில் இவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள். இக்குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 323.9 பில்லியன் டாலர் ஆகும். இக்குடும்பத்தின் முகம்மது பின் சயீத் அல்நஹ்யான் தான் ஐக்கிய அரபி எமிரேட்ஸ்-ன் அதிபராக இருக்கிறார்.

அல்தானி குடும்பம்
கத்தார் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களை மேற்கொள்ளும் அல்தானி குடும்பம் உலக அளவில் மூன்றாவது பணக்கார குடும்ப பட்டியலில் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு 172.9 பில்லியன் டாலர் ஆகும்.

ஹெர்ம்ஸ் குடும்பம்

பிரான்ஸ் நாட்டின் ஆடம்பர பொருட்கள் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஹெர்ம்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஆக்செல் டுமாஸ் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்களின் சொத்து மதிப்பு 170.6 பில்லியன் டாலர் ஆகும்.

கோச் குடும்பம்

அமெரிக்காவின் எண்ணெய் வள தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பிரெடெரிக், சார்லஸ், டேவிட், வில்லியம் கோச் ஆகியோர் தங்களது தந்தையின் தொழிலைப் பெற்றதன் மூலமாக உலகின் 5-வது பணக்கார குடும்பத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 148.5 பில்லியன் டாலர் ஆகும்.

அல் சௌத் குடும்பம்
வளைகுடா நாடான சவூதி அரேபியோ நாட்டின் இளவரசர் முகம்மது பின் சல்மான் குடும்பத்தினர் எண்ணெய் வர்த்தக தொழில் மூலமாக உலகின் ஆறாவது பணக்கார குடும்பமாகத் திகழ்கின்றனர். இவர்களின் சொத்து 140 பில்லியன் டாலர் ஆகும்.

மார்ஸ் குடும்பம்
உலகில் செல்லப்பிராணிகளுக்கான பராமரிப்புப் பொருட்கள் மற்றும் பிரபலமான மில்கி வே, ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் கம்பெனிகளின் முதலாளிகளான மார்ஸ் குடும்பம் 133.8 பில்லியன் டாலர்களுடன் 7-வது இடத்தில் உள்னர்.

அம்பானி குடும்பம்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பல தொழில் நிறுவனங்களுடன் 99.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 8-வது பணக்கார குடும்பமாக உள்ளனர்.

வெர்தெய்மர் குடும்பம்
பிரான்ஸ் நாட்டின் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிறுவனமான நேஷனல் நிறுவனத்தின் வெர்தெய்மர் மற்றும் ஆலன் ஆகியோர் 88 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9-வது இடத்தில் உள்ளனர்.

தாம்சன் குடும்பம்
கனடா நாட்டின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான தாம்சன் ராய்ட்டர்ஸ் குடும்பம் 87.1 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 10-வது இடத்தில் உள்ளனர்.