உலக பணக்காரர் பட்டியல்.. முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறிய முகேஷ் அம்பானி..5வது இடத்தில் ரோஷினி நாடார்..!

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு  கடந்த ஒரு ஆண்டில் ₹1 லட்சம் கோடி குறைந்துவிட்டதால், உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து அவர் வெளியேறினார். இதனால் அவர்…

mukesh roshini

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு  கடந்த ஒரு ஆண்டில் ₹1 லட்சம் கோடி குறைந்துவிட்டதால், உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து அவர் வெளியேறினார். இதனால் அவர் தற்போது ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை மட்டுமே பெற்றிருக்கிறார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் அதிகரிப்பு, எரிசக்தி மற்றும் சில்லறை வணிக துறைகளில் மந்தமான வளர்ச்சி ஆகிய காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்ததாக கூறப்படுகிறது.  அதே நேரத்தில் அம்பானி தனது கவனத்தை டிஜிட்டல், மற்றும் சில்லறை விரிவாக்கத்தில் கவனம் செலுத்தியதால் வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  எலோன் மஸ்க் உள்ளார்.  அவரது மொத்த சொத்து மதிப்பு 82% உயர்ந்து $420 பில்லியன்  என உள்ளது.

இந்த நிலையில் உலகின் முதல் 10 பெண்கள் பணக்காரர்களில் ரோஷ்னி நடார் 5வது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளார். ரோஷ்னி நாடார் மற்றும் அவரது குடும்பம்  ₹3.5 லட்சம் கோடி நிகர சொத்து மதிப்புடன் உலகின் 5வது பெண் பணக்காரராக உள்ளார். HCL நிறுவனத்தின் வாரிசான ரோஷ்னி நடார், அவரது தந்தை ஷிவ நாடாரிடமிருந்து 47% பங்குகளை பெற்றதன் மூலம், உலகின் முதல் 10 பெண்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பதும், இந்த பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அளவிலான பணக்காரர் பட்டியலில் அம்பானி, அதானிக்கு அடுத்து 3வது இடத்தையும் ரோஷினி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அளவில் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல் இதோ:

முகேஷ் அம்பானி & குடும்பம் – ₹8.6 லட்சம் கோடி

கவுதம் அதானி & குடும்பம் – ₹8.4 லட்சம் கோடி

ரோஷ்னி நடார் & குடும்பம் – ₹3.5 லட்சம் கோடி

திலிப் ஷாங்கவி & குடும்பம் – ₹2.5 லட்சம் கோடி

அசிம் பிரேம்ஜி & குடும்பம் – ₹2.2 லட்சம் கோடி

குமார் மங்களம் பெர்லா & குடும்பம் – ₹2 லட்சம் கோடி

சைரஸ் பூனாவாலா & குடும்பம் – ₹2 லட்சம் கோடி

நீரஜ் பஜாஜ் & குடும்பம் – ₹1.6 லட்சம் கோடி

ரவிஜெய்பூரியா & குடும்பம் – ₹1.4 லட்சம் கோடி

ராதாகிஷன் தமாணி & குடும்பம் – ₹1.4 லட்சம் கோடி