உலகின் மிக நீளமான நான் – ஸ்டாப் விமான பயணம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் இந்த விமான பயணத்தில் பயணம் செய்யும் பயணிகள் விமானத்திலிருந்து இரண்டு முறை சூரிய உதயத்தை பார்க்கலாம் என்றும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் பல பகுதிகளில் தற்போது நான் – ஸ்டாப் இயங்கி வந்தாலும், முதல் முறையாக 20 முதல் 22 மணி நேரம் நான் – ஸ்டாப் பயண ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போது, சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் 18 மணி நேரம் நான் ஸ்டாப் மூலமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக 22 மணி நேரம் வரை நான் ஸ்டாப் விமானம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் 2 முறை சூரிய உதயத்தை அல்லது சூரிய மறைவை பார்க்க வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியாலிருந்து நியூயார்க் வரை செல்லும் இந்த விமானத்திற்காக பிரத்யேக விமானம் செய்யப்பட இருப்பதாகவும், Qantas, ஏர்பஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏ 350 என்ற புதிய வகை விமானத்தை தயார் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு முதல் இந்த விமானங்கள் இயக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாலிருந்து அமெரிக்காவுக்கு நான் ஸ்டாப் விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.