ஆட்டோ மொபைல் துறையின் அரசனாக விளங்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்.. உலகமே எதிர்நோக்கும் சிஎன்ஜி பைக்கில் அப்படி என்ன இருக்கு?

By John A

Published:

ஒரு காலத்தில் டிவிஎஸ் 50 வைத்திருந்தாலே அவர் பெரிய பணக்காரராக இருப்பார் என்ற பிம்பத்தினை உடைத்து இன்று பைக் இல்லாத வீடுகளே இல்லை என்னும் அளவிற்கு இருசக்கர வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன. பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதைக் காட்டிலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை அதிகம் விரும்புகின்றனர் வாகன ஓட்டிகள்.

நாளுக்கு நாள் ஆட்டோமொபைல் துறை அசுர வளர்ச்சி அடைய இன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையும் அதிகமாகி வருகிறது. குறைவான மின்சார நுகர்வு, அதிக மைலேஜ், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு எனப் பல்வேறு வகைகளில் எலட்ரிக் பைக்குகள், கார்கள் விளங்குவதால் அதனை வாகன ஓட்டிகள் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் எரிபொருளுக்காகவே சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையைச் செலவழித்து வருகின்றனர். இதெற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்காதா? அதிக மைலேஜ் தரும் வாகனங்கள் சந்தைக்கு வருமா என்று ஏங்கியிருந்த வாகன ஓட்டிகளுக்கு நாளை முதல் விடிவு காலம் பிறக்கப்போகிறது.

UPSC இந்த விண்ணப்பதாரர்களுக்கான படிவத்தை வெளியிட்டுள்ளது… யார் விண்ணப்பிக்கலாம்…? முழு விவரங்கள் இதோ…

ஆம் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் உலகிலேயே முதன் முறையா சி.என்.ஜி. இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதென்ன சிஎன்ஜி என்கிறீர்களா? பெட்ரோல் மற்றும் கேஸ் ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் இன்ஜின் வடிவமைக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்குப்பின்னர் வெளிஉலகில் முதன் முதலாக அடியெடுத்து வைக்கிறது.

உலக ஆட்டோமொபைல் சந்தைகளுக்குச் சவால்விடும் வகையில் அமைந்த பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி பைக் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது ஒரு சிஎன்ஜி-க்கு சுமார் 85 கி.மீ வரை மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. தற்போது பெட்ரோலில் இயங்கும் 100 சிசி பைக் விலை குறைந்த பட்சம் ரூ. 70 ஆயிரத்தில் ஆரம்பமாகிறது. 125 சிசி பைக்குகள் 1 லட்சத்தைத் தாண்டுகிறது.

இந்நிலையில் சிஎன்ஜி பைக்குகள் 125 திறன் கொண்டு விலையும் 1 லட்சத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மட்டும் மார்க்கெட்டில் வெற்றி பெறும் சூழலில் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்பிளண்டர் பிளஸ், டிவிஎஸ் விக்டர், ஹோண்டா சைன் போன்ற பைக்குகளுக்கு மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும். பொறுத்திருந்து பார்ப்போம் சிஎன்ஜி ரோடுகளின் ராஜாவாக ஜொலிக்கிறதா என்று..