பெண்ணை பின்தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் வரை சிறை.. சட்ட திருத்த மசோதா பேரவையில் முதல்வர் தாக்கல்..

பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பெண்களின் பாதுகாப்பிற்காக பல சட்டங்கள் உள்ளன. இதன்படி பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் இந்த தண்டனைகளின் கீழ் தண்டிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பினை இன்னும்…

Women Protect Law

பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பெண்களின் பாதுகாப்பிற்காக பல சட்டங்கள் உள்ளன. இதன்படி பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் இந்த தண்டனைகளின் கீழ் தண்டிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பினை இன்னும் அதிகப்படுத்தும் நோக்கிலும், குற்றங்கள் நடைபெறாத வண்ணமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்ட திருத்த மசோதாவினைத் தாக்கல் செய்தார்.

அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாதன் விளைவாக தமிழகமெங்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சட்டசபையிலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எதிர்க்கட்சியான அதிமுக-வும் யார் அந்த சார்? என்று கேள்வி கேட்டு ஆளும் திமுக அரசுக்கு குடைச்சல் கொடுத்தது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களை இன்னும் வலிமைப்படுத்தும் நோக்கில் சட்ட திருத்த மசோதோ தயார் செய்யப்பட்டது.

அந்த வகையில் இந்த புதிய சட்ட திருத்த மசோதாவில் பெண்களை பின்தொடர்ந்தாலே குற்றம் புரிபவருக்கு பிணையில் வெளிவர இயலாத வகையில் 5 ஆண்டுகள் தண்டனையும், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 14 ஆண்கள் பிணையில் வெளிவர இயலாத கடுங்காவல் தண்டனையும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

உள்ளங்கையில் உங்கள் நிலத்தின் விபரம்.. வந்தாச்சு அரசின் சூப்பர் ஆப்.. இவ்ளோ விபரம் பார்க்கலாமா…!

மேலும் பெண்கள் மீது திராவகம் வீசுதல் போன்ற கொடுங்குற்றம் புரிவோருக்கு 10 ஆண்டுகள் தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை குற்றம் புரிவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தினை வெளிப்படுத்துவோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறையும், நெருங்கிய உறவினர் அல்லது அதிகாரம் மிக்கவர்களால் பாலியல் வன்மை கொடுமை குற்றம் புரிவோருக்கு ஆயுள் தண்டனையும், கூட்டு பலாத்காரம், 18 வயதிற்குக் கீழ் உள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல் போன்ற குற்றங்களுக்கும் ஆயுள் சிறை என இந்தச் சட்ட திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.