சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.. திடீரென நடுரோட்டில் நின்று சேலை கட்டிய பெண்.. கூட்டம் கூடியதால் பரபரப்பு.. சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஒரு பெண் திடீரென நடு ரோட்டில் சேலை கட்டிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…

saree1

ஒரு பெண் திடீரென நடு ரோட்டில் சேலை கட்டிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் சாதாரணமாக நடந்து வந்து திடீரென நடு ரோட்டில் நிற்கிறார். அதன் பின்னர் சேலை அணிய தொடங்குகிறார். அந்த பெண் முதலில் சிவப்பு நிற ரவிக்கை மற்றும் கருப்பு நிற லெகிங்ஸ் அணிந்திருந்த நிலையில், கைகளில் வைத்திருந்த ஷாப்பிங் பைகளுடன் நிற்கிறார். அதிலிருந்து அவர் ஒரு சேலையை எடுத்து உடனே உடுத்த தொடங்கினார்.

முதலில் பாவாடையை கட்டி, சேலையை அவர் கட்ட தொடங்கும்போது, அவரை பார்த்து ஆச்சரியமாக நின்ற பாதசாரிகள் அவரை சுற்றி வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டனர். மேலும், தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்தனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த பெண் சேலை உடுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்தினார். சேலை உடுத்தி முடித்ததும், அந்த பெண் சுற்றியிருந்தவர்களுக்கு போஸ் கொடுக்கிறார். சில நிமிடங்களில் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.

saree.pg

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், சுமார் 30 மில்லியன் வியூஸ்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு பலர் கடுமையான எதிர்மறையான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். “இந்திய கலாச்சாரத்தை சாலையில் கேலி செய்வதா?” என்றும், “இது தேவையில்லாத கவனத்தை ஈர்க்கும் விஷயம்” என்றும், “சேலை அணிவது நல்லதுதான், ஆனால் இப்படி சாலையில் நின்று எல்லோரும் பார்க்கும் வகையில் சேலை அணிவது முறையற்றது” என்றும், “ஒரு பெண்ணுக்கு சேலை என்பது அழகான உடை, ஆனால், அதை வீட்டில் உள்ள அறைக்குள் அணிய வேண்டும்” என்றும் பலர் பலவிதமான கமெண்ட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

“நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் இப்படி பொதுவெளியில் உங்கள் அழகை காட்சிப்படுத்துவதை ஆதரிக்கவில்லை” என்றும், “இது மிகவும் வெட்கக்கேடானது, அருவருப்பானது” என்றும் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “உடை மாற்ற விரும்பினால், அதற்கு தனியாக ஒரு இடத்தை பயன்படுத்தி இருக்கலாம்” என்றும், “கவனம் ஈர்க்க விரும்புபவர்கள் தான் இப்படி அலைவார்கள்” என்றும் இன்னொரு பயனர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஆடை மாற்றியதற்காக ஒரு பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்தது போல், இவருக்கும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/DLkctuGIVoA/?utm_source=ig_web_copy_link