செங்கோட்டையனை நீக்கியது போல் பாஜகவையும் கூட்டணியில் இருந்து நீக்க முடிவு? என்ன தைரியத்தில் முடிவு எடுக்கிறார் எடப்பாடி? தேர்தலில் வெற்றியில்லை என்றாலும் பரவாயில்லை.. அதிமுக பொதுச்செயலாளர் பதவி முக்கியம் என்பது தான் ஈபிஎஸ் எண்ணமா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பதவியில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது போலவே, வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை கூட்டணியில் இருந்தும் விலக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துணிச்சலான முடிவுக்கு பின்னால், கட்சியின்…

amitshah edappadi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பதவியில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது போலவே, வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை கூட்டணியில் இருந்தும் விலக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துணிச்சலான முடிவுக்கு பின்னால், கட்சியின் தலைமை பதவியைத் தக்கவைத்துக் கொள்வதே அவரது முக்கிய நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுகவின் பல மூத்த தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியபோதும், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது. “நமக்குத் தோல்வி வந்தாலும் பரவாயில்லை, ஆனால் என்னுடைய பொதுச்செயலாளர் பதவிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால், அவர்கள் என்னை மிரட்டி பணிய வைப்பார்கள். அது எனக்கு பலவீனமாகிவிடும்” என்று அவர் கருதுவதாக தெரிகிறது.

மேலும் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்றபோது அவரை பாஜக தலைவர்கள் சந்தித்ததாக கூறப்படுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதிமுக பொதுக்குழுவில் தனக்கு இருக்கும் அமோகமான ஆதரவை பயன்படுத்தி, கட்சிக்குள் தனது பிடி தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதை எடப்பாடி நம்புகிறார். இதுவே, அவர் பாஜக போன்ற தேசிய கட்சியையும் எதிர்க்கும் தைரியத்தை அளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் செங்கோட்டையனை நீக்கியதன் மூலம், கட்சிக்குள்ளும் வெளியிலும் யாருக்கும் பணிய மாட்டேன் என்பதை அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால், அது சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்று அதிமுகவினர் அச்சப்படுகின்றனர். மேலும், பாஜகவின் செல்வாக்கு தமிழகத்தில் குறைந்துள்ள நிலையில், அவர்களுடன் கூட்டணி அமைப்பது அதிமுகவுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்று எடப்பாடி தரப்பு கருதுகிறது.

எடப்பாடியின் இந்த முடிவின் மூலம், அவர் தமிழ்நாட்டில் தனக்கான தனித்தன்மையையும், அதிமுகவின் அரசியல் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க முயல்கிறார் என்பது தெளிவாகிறது. அவர், “தேர்தலில் தோல்வியடைந்தாலும், கட்சி எனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்” என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.