ஒரு பெண் பொது இடத்தில் தன்னுடைய கணவரை பளார் பளார் என அறைந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, சமூக வலைத்தளங்களில் பரவலாக கோபத்தையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு கடையின் வெளியே படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் அந்த பெண்ணின் கணவர் பணம் சம்பாதிக்காமல் தன்னையே பொருளாதார ரீதியாக நம்புகிறார் என குற்றம் சாட்டுகிறார். அவர் அடிக்கடி கணவரை அறைந்து கத்திக் கொண்டிருக்கும் போது, கணவர் தனது கையை பிடித்து பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். அதைப் பார்த்து நிற்கும் பொதுமக்கள் யாரும் தலையிடவில்லை.
இந்த வீடியோ, X தளத்தில் “பணம் சம்பாதிக்கவில்லை என்பதற்காக, ஒரு பெண் தனது கணவரை பொது இடத்தில் அறைவது வேதனைக்குரிய காட்சி” என்று பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன், அது விரைவில் வைரலாகி, பலர் அந்த பெண்ணின் செயலை கடுமையாக விமர்சித்தனர். “ஆண்கள் மீதான வன்முறையை சாதாரணமாக எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும்” என்கிற கருத்தை பலர் பகிர்ந்தனர்.
ஒருவர் கோபமாக, “இதெல்லாம் என்ன? அந்த மனிதரை இப்படி அவமானப்படுத்தும் உரிமையை அந்த பெண்ணுக்கு யார் கொடுத்தது?” எனக் கேள்வி எழுப்பினார்.
மற்றொருவர், “மனைவியால் கணவர் அறையப்படுவது என்ன புதிய விஷயமா? இல்லை இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் நடந்ததே இல்லையா? ஆனால் பொது வெளியில் இதை செய்திருக்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
மூன்றாவது ஒருவர், நகைச்சுவையாளர் கிறிஸ் ராக் சொன்னதை நினைவு கூர்ந்து, “பெண்கள், குழந்தைகள் மற்றும் நாய்கள் மட்டுமே நிபந்தனையற்ற அன்பு பெறுகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.
“பணம் சம்பாதிக்க முடியாமை குற்றமல்ல. ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணையை பொது இடத்தில் அறைப்பது ஒரு குற்றம். பாதிக்கப்பட்டவர் ஆணாக இருந்தாலேவென வன்முறையை சாதாரணமாக்க வேண்டாம்,” என மற்றொரு பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர், “அவர் வருமானத்தை இழந்திருக்கலாம், மரியாதையை அல்ல. இந்த வீடியோ, ஒருவர் சம்பாதிக்கவில்லை என்பதற்காக அவரை அவரது மனைவி பொது இடத்தில் தாக்குவது வேதனைக்குரியதாய் காட்டுகிறது. வன்முறைக்கு பாலின எல்லைகள் கிடையாது, ஒவ்வொரு மனிதருக்கும் மரியாதை வேண்டும்,” என்று எழுதியுள்ளார். இதே ஒரு பெண்ணை ஆண் அறைந்து இருந்தால், இந்நேரம் அந்த ஆண் சிறையில் இருப்பார்’ என்று பகிர்ந்துள்ளார்.
https://x.com/gharkekalesh/status/1909539266398478662