ஹைதராபாத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் விஸ்கி கலந்து விற்பனை செய்ததாக புகார் வந்ததை அடுத்து அந்த கடையின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்க்ரீமில் வித்தியாசமான வாசனை வருவதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து புகார்களும் எழுந்தது. இதனை அடுத்து ஹைதராபாத் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஸ்கிரீம் கடைக்கு சென்று சோதனை செய்ததில் அவர்கள் விற்பனை செய்த ஐஸ்கிரீமில் விஸ்கி கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது
ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 மில்லி விஸ்கி கலந்து உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வழக்கமான ஐஸ்கிரீம்களை விட இந்த ஐஸ்கிரீம் விலை அதிகம் என்றும் ஆனால் வித்தியாசமான வாசனை உள்ளதாக புகார் அளிப்பதை அடுத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடையில் இருந்து 11.50 கிலோ விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கடையின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.