WhatsApp வீடியோ காலில் 2 புதிய அம்சங்கள்.. இனி இனிமையான அனுபவம்தான்..!

By Bala Siva

Published:

 

WhatsApp என்பது தற்போது மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில், மெட்டா நிறுவனம் தனது WhatsApp பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வீடியோ கால் அழைப்புகளுக்கு இரண்டு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp மூலம் வீடியோ கால் செய்பவர்களுக்கு இனி பின்னணி மற்றும் பில்டர் களை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் WhatsApp அழைப்பின் மூலம் புதிய அனுபவத்தைப் பெற முடியும். WhatsApp அழைப்புகளின் போது நம்மிடம் பேசுபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக பின்னணி அமைப்புகளை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சங்கள் ஏற்கனவே Zoom மற்றும் Microsoft Teams ஆகியவற்றில் இருந்தாலும், தற்போது WhatsApp செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த அம்சம், நிச்சயமாக பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பின்னணியில் பிளாக் அண்ட் வைட், இயற்கை காட்சிகள், ஆறுகள், கடல்கள், மலைப்பகுதிகள் போன்றவற்றை நாம் வைத்துக் கொள்ளலாம். இதனால் WhatsApp உரையாடல் இனி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அலுவலகம், காபி ஷாப், ஹோட்டல், பீச், சூரிய உதயம், சூரிய மறைவு, கொண்டாட்டங்கள் போன்றவையும் பின்னணியில் வைத்துக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.

இந்த அம்சத்தை பயன்படுத்த, வீடியோ அழைப்பின் போது வலது புறத்தில் உள்ள “Effects” என்ற சின்னத்தை கிளிக் செய்து தேர்வு செய்யலாம். பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற பின்னணிகளை தேர்வு செய்து கொண்டு வீடியோ அழைப்புகளை மகிழ்ச்சிகரமாக மாற்றலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வாரங்களில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும், தற்போது சோதனை முயற்சியாக சிலருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.